தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது

by Admin / 20-03-2022 12:56:00pm
 தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் கல்லூரிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. 

இதுதொடர்பாக, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை கடந்த வாரம் நடைபெற்றது.

இந்த மனுக்களை கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி மற்றும் நீதிபதிகள் கிருஷ்ணா எஸ். தீட்சித் மற்றும் காஜி செய்புன்னேசா மொகியுதீன் ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச் விசாரணை நடத்தியது.
 
அப்போது, ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று கேரிய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். ஹிஜாப் அணிவது இஸ்லாம்மின் இன்றியமையாத அங்கம் அல்ல என்பதையும் குறிப்பிட்டது.

இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த தமிழத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.    

திருநெல்வேலியில் கோவை ரஹமத்துல்லாவும், தஞ்சையில் இருந்து எஸ்.ஜமால் முகமது உஸ்மானியும் போலீசார் கைது செய்துள்ளனர். 

இவர்கள் இருவரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நிர்வாகிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு போலீசார் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via