இம்ரான்கான் பதவிக்கு கெடு விதித்த பாகிஸ்தான் ராணுவம்

by Staff / 22-03-2022 04:13:57pm
இம்ரான்கான் பதவிக்கு கெடு விதித்த பாகிஸ்தான் ராணுவம்

பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. கடுமையான கடன் சுமை ஒருபுறம், பொருளாதார வீழ்ச்சி மறுபுறம் என இரட்டை சிக்கலை சந்தித்து வருகிறது. இதையடுத்து, அந்நாட்டு ராணுவத்துக்கும் ஒதுக்கீட்டை குறைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீது வரும், 28-ஆம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதனிடையே பிரதமர் இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என அந்நாட்டு ராணுவத் தளபதி கெடு விதித்துள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
மேலும் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அவரது சொந்த கட்சி எம்.பி.க்களே எதிராக வாக்களிக்க உள்ளதால் இம்ரன்கானால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்றே கூறப்படுகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரான ஷேபாஸ் ஷெரீப்பை அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்க அனைத்து எதிர்கட்சிகளும் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

 

Tags :

Share via