கமுதியில் வினோத வழிபாடு

by Editor / 23-03-2022 11:22:52am
கமுதியில் வினோத வழிபாடு

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி முத்துமாரி அம்மன் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு பக்தர்கள் கோடைகாலத்தில்  தங்களது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் தங்களது உடல் முழுவதும் சகதி பூசி சேத்தாண்டி வேடமிட்டு  கைகளில் வேப்பிலை ஏந்தி பயபக்தியுடன் மேளதாளங்கள் முழங்க இசைக்கு ஏற்றவாறு  நடனமாடி  தங்களது வினோதமான நேர்த்திக்கடனை பக்தர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிறைவேற்றினர்  

கமுதியில் நகர் மையப் பகுதியில் அருள்மிகு  முத்துமாரியம்மன் கோவில் அமைந்து பக்தர்களுக்கு அருள் பாவித்து வருகிறார்.இக்கோவில் முக்கிய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பொங்கல் விழா 15 நாட்கள் தொடர்ந்து  நடைபெறும்,கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பின்னர்  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின் தற்போது முதன் முறையாக நடைபெற்ற இந்த  திருவிழா இந்த ஆண்டு கடந்த 9ம் தேதி காப்பு கட்டு கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது

முக்கிய நிகழ்ச்சியான இன்று முத்துமாரி அம்மனுக்கு கோடை காலத்தில் தங்களது உடல்களை வெப்பத்தில் இருந்து பாதுகாத்து உடல் நலம் உடல் ஆரோக்கியத்தை அம்மன் பாதுகாக்க வேண்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது உடல் முழுவதும் சகதி பூசி சேத்தாண்டி வேடம் அணிந்து தங்களது வினோத நேர்த்திக் கடனை கமுதி சுற்றுவட்டார பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பக்தர்கள்  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின் இந்த ஆண்டு தங்களது நேத்தி கடனை நிறைவேற்றினர்

கமுதியில் வினோத வழிபாடு
 

Tags : Strange worship in Kamuti

Share via