நாய்குட்டிகளை கொன்ற குரங்குகள் ..குரங்குக்குட்டியை கொன்றதால் பழிக்கு பழி

by Admin / 19-12-2021 04:54:16pm
நாய்குட்டிகளை கொன்ற குரங்குகள் ..குரங்குக்குட்டியை கொன்றதால் பழிக்கு  பழி

மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தில் லாவூல் என்ற கிராமம் உள்ளது. இங்கு குரங்குகளும் நாய்களும் அதிகம் வசிப்பதாக கூறப்படுகிறது.இதனால் நாய்களுக்கும் குரங்குகளுக்கும் அடிக்கடி சண்டை வருவது வழக்கம் என அப்பகுதியினர் கூறுகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் குரங்குகள் 80 நாய்குட்டிகளை கொன்ற சம்பவம் அக்கிராமத்தில் அறங்கேறியுள்ளது.இதனை குறித்து அப்பகுதியினர் கூறுகையில்,சில மாதங்களுக்கு முன் இங்கு உள்ள சில நாய்கள் சேர்ந்து ஒரு குரங்கு குட்டியை கொன்றதாக சொல்லப்பட்டனர்.

அன்றிலிருந்து அக்கிராமத்தில் உள்ள குரங்குகள் குட்டியை கொன்ற நாய் இனங்களை பழி வாங்கும் நோக்கத்தில் சுற்றி திரிந்ததாக கூறப்படும் மக்கள் இறந்து போன குரங்குட்டியின் தாய் தந்தை குரங்குகள் நாய் குட்டிகளை கொன்று பழிவாங்குவதாக தெரிவித்தனர்.

குரங்குகள் அங்கிருக்கும் நாய்குட்டிகளை தினமும் பழிவாங்க எடுத்து செல்லும் காட்சியை காணமுடிவதாக அப்பகுதியினர் கூறியுள்ளனர்.இதுவரை எடுத்து செல்லபட்ட நாய்குட்டிகளை குரங்குகள் மரத்தின் மீது ஏறியும்,உயரமான கட்டிடங்களுக்கு மேலும் எடுத்து சென்று அங்கிருந்து தூக்கி வீசப்படுவதாக கூறுகின்றனர்.

இப்படிப்பட்ட செயல்களை செய்து வரும் குரங்குகளினால் கிராமத்தில் ஒரு நாய் குட்டிகள் ஒன்று கூட மிச்சமில்லை எனவும்,குரங்குகளின் செயல்களை கண்டு நாங்கள் அச்சமடைந்துள்ளோம் என உள்ளூர் வாசிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதை போன்று வெளியூர்களில் இருந்து வரும் குரங்குகள் நாய் குட்டிகளையே தேடி கொள்வதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.இதனை தொடர்ந்து அச்சத்தில் உறைந்த மக்கள் அப்பகுதியை சுற்றியுள்ள குரங்குகளை விரட்டியடிக்க வனத்துறையினரின் உதவியை நாடியுள்ளனர். அதனை தொடர்ந்து கிராமத்திற்கு வந்த அதிகாரிகள் இதுவரை இரண்டு குரங்குகளை மட்டுமே பிடிப்பட்டதாக தெரிவித்தனர்.

மேலும் வன துறை அதிகாரிகள் இதனை பற்றி கூறுகையில் லாங்கூர் போன்று தோற்றமளிக்கும் இரு குரங்குகளை மட்டுமெ பிடித்துள்ளோம்,அதனையும் நாக்பூருக்கு மாற்றப்பட்டு அருகிலுள்ள காட்டில் அக்குரங்குகள் விடப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

Tags :

Share via