600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

by Staff / 22-12-2022 01:52:47pm
600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கிறிஸ்துமஸ் பண்டிகையை சொந்த ஊர்களில் பொதுமக்கள் கொண்டாட ஆண்டுதோறும் போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி, பொதுமக்கள் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால், நாளை முதல் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.வரும் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via