உ.பி.யிலிருந்து வழிதவறி குமரிக்கு வந்த சிறுவன் மீட்பு.

by Editor / 30-03-2022 04:21:46pm
உ.பி.யிலிருந்து வழிதவறி குமரிக்கு வந்த சிறுவன் மீட்பு.

கன்னியாகுமரி கடற்கரையில் 13 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் சுற்றிக் கொண்டிருந்தார். அவரிடம் ரோந்து பணியில் இருந்த கன்னியாகுமரி காவல் நிலையத்தின் முதல்நிலைக் காவலர் கலைச்செல்வி விசாரணை செய்தபோது அவருடைய பெயர் மீல மாதவா என்பதும் உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து வருவதாகவும் தனது குடும்பத்தினர் அங்கு இருப்பதாகவும் தெரிவித்தார். அவரை மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மூலமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக விசாரணை செய்தபோது உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் கோவர்தன் என்ற காவல் நிலையத்தில் சிறுவன் காணாமல் போனதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அவருடைய பெற்றோர் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த வாசுதேவ ஜார்வினன் அலெக்ஸான்ட்ரா ஜார்வினன் தம்பதியர் என்பதும் அவர்கள் சுமார் 14 வருடங்களாக உத்தர பிரதேசத்தில் வசித்து வருவதும் தெரியவந்தது. இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட உத்தரபிரதேச காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கிருந்து சிறுவனின் தந்தை மற்றும் போலீசார் குமரிமாவட்டம் வந்தனர்.இதனை தொடர்ந்து சிறுவனை 29:03;2022 அன்று கன்னியாகுமரி மாவட்ட காவல் துறைகண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

 

Tags : Rescue of a boy who came to Kumari on the way from UP.

Share via