மார்ச் மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ 1 லட்சத்து 42 ஆயிரத்து 95 கோடியாகும்

by Admin / 01-04-2022 11:02:17pm
மார்ச் மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ 1 லட்சத்து 42 ஆயிரத்து 95 கோடியாகும்

ஜி.எஸ்.டி வரி வசூல் குறித்து மத்திய நிதியமைச்சகத்தின் அறிக்கையில்  தெரிவித்திருப்பது,மார்ச் மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ 1 லட்சத்து 42 ஆயிரத்து 95 கோடியாகும்.இதில்,சி.ஜி.எஸ்.டிரூ25,830 கோடி,எஸ்.ஜி.எஸ்.டி.ரூ 32,378 கோடி ஆகும்.பொருட்கள் இறக்குமதி மூலம் வசூலான 39,131கோடி உள்பட ஐ.ஜி.எஸ்.டி.வசூல் ரூ.74,470 கோடி ஆகும்.பொருட்கள் இறக்குமதி மூலம் வசூலான ரூ.981 கோடி உள்பட செஸ் வரி மூலம் ரூ 9,414 கோடி கிடைத்துள்ளது,கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வசூலான ஜி .எஸ்.டி தொகையை விட நடப்பு ஆண்டு 15 சதவிதம் கூடுதலாக கிடைத்துள்ளது.மார்ச் மாதத்தில் மொத்த ஜி.எஸ்.டி வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்தது.இது ஜனவரி மாதம் வசூலிக்கப்பட்ட ரூ.1.41 டிரில்லியன் என்ற முந்தைய சாதனையை முறியடித்துள்ளது

 

Tags :

Share via