அஸ்ஸாம் மாநிலத்தின்ஹவ்ஹாத்தியில் உள்ள மிகவும் பிரபலமான மதத் தலங்களில் ஒன்று காமாக்யா தேவி

by Writer / 02-04-2022 10:15:03pm
அஸ்ஸாம் மாநிலத்தின்ஹவ்ஹாத்தியில் உள்ள மிகவும் பிரபலமான மதத் தலங்களில் ஒன்று காமாக்யா தேவி

ஹவ்ஹாத்தியில் உள்ள மிகவும் பிரபலமான மதத் தலங்களில் ஒன்று காமாக்யா தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட காமாக்யா கோயில் ஆகும். இது மிகப் பழமையான சக்தி பீடங்களில் ஒன்றாகவும், நகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயில் பத்து மகாவித்யாக்களை உள்ளடக்கியஅதிக முக்கியத்துவம் வாய்ந்தது. நான்கு கர்பக்ரிஹாக்கள் மற்றும் மூன்று மண்டபங்களைக் கொண்டுள்ளது, சுவர்கள் பல சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கோவிலுக்குள் தேவியின் சிலை இல்லை, மாறாக தெய்வத்தின் யோனியின் உருவம் இங்கு வழிபடப்படுகிறது தேவியைவழிபாடுசெய்ய இருண்ட கருவறைக்குள்செல்லவேண்டும். இந்த கோவிலில் , காமாக்யா தேவி இரத்தம் சிந்தும் தேவி என்று அறியப்படுகிறார். நிலாச்சல் மலைகளின் அற்புதமான காட்சி மற்றும் கோயிலின் ஆன்மீக சூழ்நிலை  ஆன்மாவிற்கும் மனதிற்கும் அமைதியை அளிக்கிறது.மாலை ஆரத்தியின் போது கோவில் மிகவும் அழகாக காட்சியளிக்கிறது.

 இங்கு ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழா அம்புபாச்சி மேளா ஆகும். இந்துக்களுக்கு மிகவும் புனிதமானதாகக் கருதப்படும் மானசா பூஜையின் போது ஏராளமான பக்தர்கள் இங்கு காணப்படுகின்றனர். நவராத்திரியின் போது கோயில் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது மற்றும் திருவிழாவில் பங்கேற்க உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் ஏராளமான பார்வையாளர்கள் கோயிலுக்கு வருகிறார்கள். எனவே, ஆரத்தியில் கலந்துகொள்வதே இங்கு செய்ய வேண்டிய ஒரு சிறந்தவிஷயம். அருகில் உள்ள புவனேஸ்வரி தேவி கோவிலுக்கும் செல்ல வேண்டும்.


அஸ்ஸாம் மாநிலத்தின்  தலைநகரான ஹவ்ஹாத்தி சென்னை,மும்பை,டெல்லி போன்று மக்கள் கூட்டம்
அதிகமுள்ள ஒரு பரபரப்பான நகரமன்று .பிரம்மபுத்ரா நதிக்கரையில் உள்ள சிறிய நகரம்.அஸ்ஸாமின்
சிறப்புகளில் காமாக்யா கோவிலும் காண்டாமிருகங்கள் அதிகமாக வாழும் மிருக காட்சி சாலையும்தான்.
ஹவ்ஹாத்தி  புகைவண்டி நிலையத்திலிருந்து,அருகில் நடந்து சென்றால்,இந்திய ரிசர்வ் வங்கியினைக்கடந்து
சென்றால் காமாக்யா கோவிலுக்குச்செல்லும் பேருந்துகள் வரும்.மலை மீது உள்ள கோயில் கிழக்கிந்திய
பாணியில் வடிவமைக்கப்பட்ட கோயில் .காமாக்ய தேவியை தரிசிக்க எப்பொழுதும் நீண்ட வரிசை..வரிசையில்
செல்கையில் எருமை மாடு,ஆடுகள் பலியிடப்படுவதை பார்க்க முடியும்.கோவிலுக்குள் சென்று காமாக்யதேவி யை
வழிபட அதிக நேரம் ஆகிறது.இருண்ட ஒரு பகுதிக்குள் அதாவது  சுரங்கம் போன்று பெரியபள்ளத்திற்குள்
சிறிய ஊற்று அதிலிருந்து தண்ணீர் மொண்டு தருகிறார்கள்.அதுதான் காமக்ய தேவியின் யோனி.அதிலிருந்து நிற்காமல் ரத்தம் தண்ணீராகப் பெருக்கெடுத்து வருகிறது.அந்த தேவியின் பிறப்புறுப்பிலிருந்து வரும்நீர்தான் பிரசாதம்.தேவியின்
விக்ரகம் கிடையாது .இதற்கான புராணகதைகளை தேவியின் வரலாறாக ச்செல்கிறார்கள். மிகவும் சக்தி வாய்ந்த
கோவிலாக அஸ்ஸாம் மக்களால் வழிபடக்கூடிய ஸ்தலம் தான் ஹவ்ஹாத்தி காமாக்யா கோவில். விமானம் அல்லது இரயில்கள் வழியாகஹவ்ஹாத்திக்கு எளிதாகப் பயணம் செய்யலாம்.

அஸ்ஸாம் மாநிலத்தின்ஹவ்ஹாத்தியில் உள்ள மிகவும் பிரபலமான மதத் தலங்களில் ஒன்று காமாக்யா தேவி
 

Tags :

Share via