குற்றாலம்,கொடைக்கானல் வனப்பகுதிகளில் காட்டு தீ

by Editor / 05-04-2022 08:23:39am
குற்றாலம்,கொடைக்கானல் வனப்பகுதிகளில் காட்டு தீ

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை இல்லாத நிலை நீடித்து வருவதால் வனப்பகுதியில் செடி,கொடிகள், புல்வெளிகள் உள்ளிட்டவர்கள் காய்ந்து வருகின்றன. இதன் காரணமாக வனப்பகுதிகளில் ஏற்பட்ட தீ காரணமாக ஆங்காங்கே வனப்பகுதியில் தீ பற்றி எரிந்து வருகிறது.இதன் தொடர்ச்சியாக  துப்பாக்கி மலைப்பகுதியில் காட்டு தீ கொழுந்து விட்டு எரிகின்றது, இதன் காரணமாக கொடைக்கானல் பெருமாள்மலை உட்பட்ட பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தீவிரமாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் காரணமாக ஆங்காங்கே தீப்பிடித்து எரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.இதே போன்று தென்காசி மாவட்டம் குற்றாலம் வனப்பகுதிகளில்,மத்தாளம்பாறைவனப்பகுதியிலும் காட்டுதீ ஏற்பட்டு மரங்கள்,அரியவகை மூலிகை செடிகள் தீயில் எரிந்து நாசமாயின.

 

Tags :

Share via