உக்ரைன் இனபடுகொலைக்கு எதிராக தடை விதிக்கப்பட்டதுக் குறித்து மெட்டா விளக்கம்

by Staff / 05-04-2022 03:56:44pm
உக்ரைன் இனபடுகொலைக்கு எதிராக தடை  விதிக்கப்பட்டதுக் குறித்து மெட்டா விளக்கம்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் புச்சா உள்ளிட்ட சில நகரங்களில் ரஷ்ய ராணுவம் மக்களை கொன்று குவித்து இனப்படுகொலையில் ஈடுபட்டது உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதன் விளைவாக ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை மேற்கு நாடுகள் கடுமையாக்கியுள்ளன.இந்த நிலையில் உக்ரைன் இனப்படுகொலைக்கு எதிராக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டவர்களின் இணைய பக்கங்கள் தடை செய்யப்பட்டது மக்களை மேலும் அதிர்ச்சியடைய செய்தது. இதற்கு மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஆண்டி ஸ்டோன் விளக்கமளித்துள்ளார். அதில் வன்முறை படங்களை ஸ்கேன் செய்யும் தானியங்கி அமைப்புகளே இந்த தடைக்கு காரணம் என்றும் தற்போது தடை நீக்கப்பட்டுவிட்டதாகவும் கூறினார். 

 

Tags :

Share via