15ம் தேதி முதல் மீன்பிடித் தடைக்காலம் அலைமோதிய மக்கள் கூட்டம்

by Editor / 10-04-2022 05:47:33pm
 15ம் தேதி முதல் மீன்பிடித் தடைக்காலம் அலைமோதிய மக்கள் கூட்டம்

தமிழக  வங்கக்கடல், கிழக்கு கடற்கரை பகுதிகளில், 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் வரும் 15ம் தேதி துவங்குகிறது. மீன் உள்ளிட்ட கடல் உயிரிகளின் இன விருத்திக்காக, வங்கக் கடல் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை பகுதிகளில், ஆண்டுதோறும் 60 நாட்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, இந்த ஆண்டுக்கான தடைக்காலம், வரும் 15ம் தேதி துவங்கி  ஜூன் 14ம் தேதி வரை இந்தத் தடை காலம் அமலில் இருக்கும்.இதன் காரணமாக, தமிழகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்ல அனுமதியில்லை.அதே சமயம் ,கட்டுமரங்கள், சிறு பைபர் படகுகள் மூலம் மட்டுமே மீன்பிடிக்க முடியும். இதனால், மீன் வரத்து குறைந்து, விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.இந்த நிலையில் மீன்பிடித்தடைக்காலம் 
 நெருங்கியுள்ளதால் இன்று கடைசி ஞாயிற்றுக் கிழமை என்பதால் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் சென்னை உள்ளிட்ட  சந்தைகளில் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகரித்ததால் மீன் விலை பல மடங்கு உயர்ந்தது.ஒரு கிலோ வஞ்சரம் ரூ.1,200க்கு விற்பனைஆனது.

 

Tags :

Share via