மளிகை வியாபாரியிடம் 264 பவுன் நகை கொள்ளை.

by Staff / 12-04-2022 05:06:07pm
மளிகை வியாபாரியிடம் 264 பவுன் நகை கொள்ளை.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தங்க பெருமாள் தற்போது சென்னை வில்லிவாக்கத்தில் குடும்பத்துடன் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் தூத்துக்குடியில் இருக்கும் விளாத்திகுளத்தில் நடைபெறவுள்ள திருவிழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக தன் குடும்பத்துடன் வேனில் ஊருக்கு புறப்பட்டார், ஊருக்குப் புறப்படும்போது நகை உட்பட பல முக்கிய பொருள்களை அட்டை பெட்டிக்குள் வைத்து வேனில் மேல்பகுதியில் வைத்துள்ளார்.

பின்னர் அவர் டீ குடிப்பதற்காக டீக்கடையில் வேலை நிறுத்திவிட்டு தன் குடும்பத்தினருடன் டீ குடித்துக் கொண்டிருக்கும்போது வேனின் மேல் பகுதியில் இருந்த அட்டை பெட்டி மாயமாகி இருந்தது.

264 பவுன் நகை திருடு போனதை தங்க பெருமாள் போலீசாரிடம் புகார் அளித்தார். அப்பகுதியில் இருந்த இரண்டு பேர் சந்தேகப்படும்படி இருந்தனர்.அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Tags :

Share via

More stories

Logo