தேஜாஸ் மற்றும் முத்துநகர் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

by Editor / 16-04-2022 09:40:57pm
தேஜாஸ் மற்றும் முத்துநகர் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

தமிழ் புத்தாண்டு விடுமுறை காரணமாக ரயில்களின் முன்பதிவு காத்திருப்போர் பட்டியலில் அதிகமான பயணிகள் உள்ளனர்.எனவே பயணிகளின் வசதிக்காக ஏப்ரல் 17 அன்று சென்னை - மதுரை - சென்னை தேஜாஸ் ரயிலில் (22671/22672) 2 முதல் வகுப்பு குளிர்சாதன இருக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்படும்.

மேலும் ஏப்ரல் 17 அன்று தூத்துக்குடி - சென்னை முத்துநகர் ரயிலிலும் (12694), ஏப்ரல் 18 அன்று சென்னை - கன்னியாகுமரி ரயிலிலும் (12633), ஏப்ரல் 19 அன்று கன்னியாகுமரி - சென்னை ரயிலிலும் (12634), ஏப்ரல் 20 அன்று சென்னை - தூத்துக்குடி முத்துநகர் ரயிலிலும் (12693) கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படும்.

 

Tags :

Share via