ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சுற்றுலாப்பயணிகள் வருகை-பிரதமர் மகிழ்ச்சி

by Writer / 07-10-2022 11:32:55pm
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சுற்றுலாப்பயணிகள் வருகை-பிரதமர் மகிழ்ச்சி


இந்தியாவின் சுற்றுலா தலங்களில் ஜம்மு-காஷ்மீர் குறிப்பிடத்தக்கது.அதிகமாக வெளிநாட்டவரின் வருகையால்,
ஜம்மு-காஷ்மீர்  சுற்றுலாத்துறை அதிகமான வருவாயை ஈட்டியதோடு  அம்மக்கள்  கலாச்சாரம் -பண்பாடு,விருந்து,உபசரிப்புகளில் வெளி நாட்டவர்கள் அதிகம் ஈர்க்கப்பட்டு உலக சுற்றுலா பயணியர்  விரும்பும் பகுதியாக இருந்தது. இச்சூழலை தீவிரவாத அமைப்புகள்  வன்முறையைத்தூண்டி  ஜம்மு-காஷ்மீரை  போர்க்களமாக  மாற்றின .இதுநீண்ட கால பிரச்சனையாக இந்திய ஒற்றுமைக்கு  சவாலாகவும் பொது அமைதிக்கு  குந்தகமாகவும் இருந்தது. இதனால் சுற்றுலாபயணிகள் உயிருக்கு பயந்து சுற்றுலா வருவதை  நிறுத்திக்கொண்டனர். பல நாடுகளும் தங்கள்  மக்களை ஜம்மு-காஷ்மீருக்கு செல்ல வேண்டாம் என பணித்தது .இந்நிலையில்,மத்திய அரசு பல ஆக்கப்பூர்வத்திட்டங்களை அறிவித்துஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கி ..உள்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கும் அமைதிக்கும் வழிவகுத்தது.இதன் எதிரொலியே..இந்தாண்டில் ஜம்மு-காஷ்மீருக்கு கிட்டதட்ட1.62 கோடிசுற்றுலாப்பயணிகள் வருகைபுரிந்துள்ளனர்.இதனைகேட்டு பிரதமர் மோடி அதிகமாக மகிழ்ந்து கருத்து பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via