ராசி பலன்கள்-03.04.2022

by Editor / 02-04-2022 11:21:35pm
ராசி பலன்கள்-03.04.2022

மேஷம்
ஏப்ரல் 03, 2022

புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் சில மாற்றம் உண்டாகும். சிந்தனையில் புதிய தெளிவும், உற்சாகமும் ஏற்படும். வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வெளிவட்டாரங்களில் கோபத்தை விட விவேகத்தை கையாளவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சிக்கல் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை


அஸ்வினி : மாற்றம் ஏற்படும். 

பரணி : ஆதரவு கிடைக்கும். 

கிருத்திகை : நெருக்கம் அதிகரிக்கும்.
---------------------------------------


ரிஷபம்
ஏப்ரல் 03, 2022

வியாபார பணிகளில் எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும். நேரம் தவறி உணவு உண்பதை தவிர்ப்பது நல்லது. இழுபறியான சில பணிகளை எளிதில் முடிப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். பூர்வீக சொத்துக்களின் வழியில் விரயங்கள் உண்டாகும். அரசு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆதரவு மேம்படும் நாள். 


அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்


கிருத்திகை : அலைச்சல்கள் உண்டாகும்.

ரோகிணி :  இழுபறிகள் அகலும். 

மிருகசீரிஷம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
---------------------------------------


மிதுனம்
ஏப்ரல் 03, 2022

எந்தவொரு செயலையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். நுட்பமான சில விஷயங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். வர்த்தகம் சார்ந்த துறைகளில் புதுவிதமான நுட்பத்தின் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். வசதி மேம்படும் நாள். 


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


மிருகசீரிஷம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

திருவாதிரை : வாய்ப்புகள் கிடைக்கும். 

புனர்பூசம் : லாபம் மேம்படும்.
---------------------------------------


கடகம்
ஏப்ரல் 03, 2022

கால்நடை தொடர்பான பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். வழக்கு சார்ந்த பிரச்சனைகளில் திருப்பம் ஏற்படும். நேர்மறையான சிந்தனைகள் அதிகரிக்கும். சமூக பணிகளில் வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். சாதுரியமான பேச்சுக்களின் மூலம் நெருக்கடிகள் குறையும். விரயம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்


புனர்பூசம் : சாதகமான நாள். 

பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 

ஆயில்யம் : நெருக்கடிகள் குறையும்.
---------------------------------------


சிம்மம்
ஏப்ரல் 03, 2022

நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு கற்பனை வளம் அதிகரிக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். ஆதாயம் நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்


மகம் : நம்பிக்கை பிறக்கும். 

பூரம் : பாராட்டுகள் கிடைக்கும். 

உத்திரம் : கற்பனை மேம்படும்.
---------------------------------------

கன்னி
ஏப்ரல் 03, 2022

உத்தியோகம் தொடர்பான பணிகளில் விவேகம் வேண்டும். தேவையில்லாத வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மூத்த உடன்பிறப்புகளிடம் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் ஆதாயம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து செயல்படவும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. நன்மை நிறைந்த நாள். 


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


உத்திரம் : விவேகம் வேண்டும். 

அஸ்தம் : அனுசரித்து செல்லவும். 

சித்திரை : சிந்தித்து செயல்படவும்.
---------------------------------------


துலாம்
ஏப்ரல் 03, 2022

கலை பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் ஆதாயமடைவீர்கள். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். பூர்வீகம் சம்பந்தமான சுபவிரயங்களை செய்வீர்கள். குலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் தீரும். விருத்தி நிறைந்த நாள்.


அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 

அதிர்ஷ்ட எண் : 9 

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்


சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.

சுவாதி : சுபவிரயங்கள் ஏற்படும்.

விசாகம் : பிரச்சனைகள் தீரும்.
---------------------------------------


விருச்சிகம்
ஏப்ரல் 03, 2022

உறவினர்களின் வழியில் எதிர்பார்த்திருந்த சில உதவி கிடைக்கப் பெறுவீர்கள். பணிகளில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். வர்த்தக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் ஏற்படும். கவனம் வேண்டிய நாள். 


அதிர்ஷ்ட திசை : தெற்கு 

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்


விசாகம் : உதவி கிடைக்கும். 

அனுஷம் : வெற்றிகரமான நாள். 

கேட்டை : முன்னேற்றம் உண்டாகும்.
---------------------------------------


தனுசு
ஏப்ரல் 03, 2022

புதிய வேலை நிமிர்த்தமான செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திட்டமிட்ட பணிகளில் சிறு சிறு அலைச்சல்கள் ஏற்பட்டு நீங்கும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். ஆக்கம் நிறைந்த நாள். 


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்


மூலம் : தாமதங்கள் குறையும். 

பூராடம் : அலைச்சல்கள் நீங்கும். 

உத்திராடம் : வாய்ப்புகள் கைகூடும்.
---------------------------------------

மகரம்
ஏப்ரல் 03, 2022

குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். மாணவர்களுக்கு கல்வியில் புதிய ஆலோசனைகளின் மூலம் தெளிவு பிறக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பயணம் ஈடேறும் நாள். 


அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் 


உத்திராடம் : மகிழ்ச்சியான நாள். 

திருவோணம் : தெளிவு பிறக்கும். 

அவிட்டம் : ஒற்றுமை அதிகரிக்கும். 
---------------------------------------

கும்பம்
ஏப்ரல் 03, 2022

வாகனம் தொடர்பான வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். செய்கின்ற முயற்சிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். செய்கின்ற செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அன்பு நிறைந்த நாள். 


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்


அவிட்டம் : மேன்மை உண்டாகும். 

சதயம் : பொறுப்புகள் அதிகரிக்கும். 

பூரட்டாதி : அனுபவம் வெளிப்படும். 
---------------------------------------

மீனம்
ஏப்ரல் 03, 2022

குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புரிதலும், அனுபவமும் மேம்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உயர்வு நிறைந்த நாள். 


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்


பூரட்டாதி : விவாதங்களை தவிர்க்கவும். 

உத்திரட்டாதி : ஒத்துழைப்பு மேம்படும்.

ரேவதி : புரிதல் உண்டாகும்.

 

Tags :

Share via