தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதி உதவி முதலமைச்சர் மு க ஸ்டாலின்

by Staff / 18-04-2022 01:29:07pm
தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதி உதவி முதலமைச்சர் மு க ஸ்டாலின்

தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விசுவாசியாக தீனதயாளன் இன் மறைவையொட்டி ஆளுநர் ஆர் என்  ரவி முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். விஸ்வாவின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். 83வது சீனியர் தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க விஷ்வா அசாமின் ஹவுகத்டில் இருந்து 3 வீரர்களுடன் காரில் மேகாலயாவின் ஹல்லங் புறப்பட்டுச் சென்றார். வழியில் ஹாங் பங்களா  என்ற இடத்தில் சென்றபோது கார் எதிரே அதி வேகமாக வந்த லாரி மோதியதில் விஷ்வா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மற்ற வீரர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சாதனைகள் புரிந்து வந்த விஷ்வா  விரைவில் நம்மை விட்டு பிரிந்து வேதனை அளிப்பதாக முதலமைச்சர் இரங்கல் குறிப்பில் பதிவிட்டார்  இதனுடைய விஸ்வாவின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு தலைவர் துஷ்யந்த் சாவுதல அறிவித்துள்ளார் .

 

Tags :

Share via