ரஷ்யாவிற்கு இந்தியா மருத்துவ உபகரணங்கள் ஏற்றுமதி

by Staff / 20-04-2022 04:06:50pm
ரஷ்யாவிற்கு  இந்தியா மருத்துவ உபகரணங்கள்  ஏற்றுமதி

இந்தியா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த மருத்துவ உபகரண நிறுவனங்கள் ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெறும் மெய்நிகர் சந்திப்பின் போது, மருத்துவ உபகரண பொருட்களின் விநியோகத்தை  அதிகரிப்பதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்கும் என்று இந்திய மருத்துவ சாதனத் தொழில் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் நாத் தெரிவித்துள்ளார்.

 இருதரப்பு உறவுகளை ஊக்குவிக்கும் வணிகக் குழுவான பிசினஸ் ரஷ்யா அமைப்பும் இந்த நிகழ்வை உறுதிப்படுத்தியுள்ளது. இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்த உள்ளூர் நாணயங்களில் பணம் செலுத்தும் முறையை ரஷ்யா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் உருவாக்குவதால், ரஷ்யாவிற்கான ஏற்றுமதியை அதிகரிக்கலாம் என இந்தியா நம்புகிறது. 

தற்போது, ரஷ்ய சந்தையில் இந்தியாவின் பங்களிப்பு குறைவாக இருந்தாலும், இந்த ஆண்டு ரஷ்யாவுக்கான ஏற்றுமதியை 10 மடங்கு அதிகரித்து 2 பில்லியன் ரூபாயாக ($26.2 மில்லியன்) உயர்த்தலாம் என இந்தியா திட்டமிட்டுள்ளது.

 

Tags :

Share via