ரயில் முன் பாய்ந்து மென்பொறியாளர் தற்கொலை தூண்டிய நபர்களை கைது செய்ய மனைவி வேண்டுகோள்

by Editor / 21-04-2022 03:00:59pm
ரயில் முன் பாய்ந்து மென்பொறியாளர் தற்கொலை தூண்டிய நபர்களை கைது செய்ய மனைவி வேண்டுகோள்

தென்காசி மாவட்டம்  பாவூர்சத்திரம் ரயில்வே கேட் பகுதியில் கடந்த 19 ஆம் தேதி சிலர் வாக்கிங் சென்றபோது தண்டவாளத்தின் அருகே இரண்டு துண்டாக வாலிபர் ஒருவர்  உடல் சிதறி கிடப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து ரெயில்வே போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டதில் ரயில் முன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர் இந்த நிலையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட நபர் பாப்பாங்குளம் அருகே உள்ள ஏபி நாடாநூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் சென்ற சுப்பிரமணியன் என்பது தெரியவந்தது.
சென்னையில் மென் பொறியாளராக பணியாற்றி இவர் தற்பொழுது பாவூர்சத்திரம் செல்வவிநாயகர் புறத்தில் வசித்தவந்துள்ளார் இவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து ஒரு குழந்தை உள்ளது. காரில் வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் கடந்த 19 ஆம் தேதி அதிகாலை பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.இவரது தற் கொலைக்கு முன்பாக அவர் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோ பதிவில் தனது சாவுக்கு இரண்டு நபர்கள் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் தற்போது சமூக வலைத்தளங்களில் அந்த இரண்டு வீடியோக்கள் வேகமாக பரவி வருவதால் தென்காசி மாவட்டத்தில் வாலிபரின் தற்கொலைக்கு காரணமாக இருந்த நபர்கள் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் அந்த வீடியோவில் அவர் தனது மனைவியிடம்  இனி வாழ மாட்டேன். வாழ முடியாது. வாழ விடமாட்டார்கள் எனது சாவுக்கு இவர்கள்தான் காரணம் என்று இரண்டு நபர்களை அழுத்தந்திருத்தமாக குறிப்பிட்டுள்ளான் அதில் வழக்கறிஞர் ஒருவரும் சம்பந்தப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரயில் முன் பாய்ந்து மென்பொறியாளர் தற்கொலை தூண்டிய நபர்களை கைது செய்ய மனைவி வேண்டுகோள்
 

Tags : Programmer commits suicide by jumping in front of train

Share via