இளம்பெண் பாலியல் பலாத்காரம் 2 பேருக்கு 31 வருடம் சிறை-வேலூர் மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

by Editor / 27-04-2022 08:54:58pm
 இளம்பெண்  பாலியல் பலாத்காரம் 2 பேருக்கு  31 வருடம் சிறை-வேலூர் மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

 வேலூர் கோட்டை பூங்காவில் வைத்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான 3 பேரும் குற்றவாளிகள் என்று வேலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.வேலூரை அடுத்த அடுக்கம்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண்,இவர்  வேலூரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வந்தார்.

 இந்த இளம்பெண்ணும், அதே கடையில் பணிபுரிந்த காட்பாடியை சேர்ந்த வாலிபரும் காதலித்து வந்தனர்.
 காதல்ஜோடியினர் 2020 ஆண்டு ஜனவரி மாதம் 18-ந் தேதி ஜவுளிக்கடையில் வேலை முடிந்த பின்னர் இரவில் கோட்டை பூங்காவிற்கு சென்று அகழி கரையோரம் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.

இரவுநேரத்தில் காதல்ஜோடியினர் தனியாக இருப்பதை அறிந்த 3 பேர் கொண்ட கும்பல் இளம்பெண்ணிடம் அத்துமீறினர். அதனை தடுத்த காதலனை அந்த கும்பல் சரமாரியாக தாக்கினர். 

பின்னர் அவர்கள், இருவரிடமும் இருந்த செல்போன், பணம் மற்றும் இளம்பெண் அணிந்த கம்மலை பறித்தனர்.மேலும் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர் அப்போது அப்பெண் கூச்சலிட்டதால் காதலனை கொலை செய்து விடுவேன் என மிரட்டி  தொடர்ந்து 3 பேரும் அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து  வேலூர் கஸ்பாசேர்ந்த 
மணிகண்டன்,வசந்தபுரத்தை சேர்ந்த சக்தி, தொரப்பாடியை சேர்ந்த மாரிமுத்து,ஆகிய 3 பேரையும் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கின் விசாரணை வேலூர் மகளிர் விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கின் இறுதிவிசாரணை நடைபெற்றது.

 இதையொட்டி மணிகண்டன், சக்தி, மாரிமுத்து ஆகிய 3 பேரையும் போலீசார் பலத்த காவலுடன் அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தபடுத்தினர். இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் கைதான 3 பேரும் குற்றவாளிகள் என்றும், அவர்களுக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டது.இதில் மணிகண்டனுக்கும்,சக்திக்கும் 31 வருடம் சிறை தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் அபராதமும்,மாரிமுத்துக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 5ஆயிரம்  ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

 

Tags :

Share via