இட்லி, தோசைக்கு அருமையான வேர்க்கடலை பொடி

by Staff / 10-05-2022 04:08:58pm
இட்லி, தோசைக்கு அருமையான வேர்க்கடலை பொடி

இந்த வேர்க்கடலை பொடியில் நல்லெண்ணையை ஊற்றி இட்லியில் பிரட்டி அப்படியே சாப்பிட்டு தான் பாருங்களேன். சொல்வதற்கு வார்த்தையே கிடையாது‌ங்க. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

வரமிளகாய் – 10,
வேர்க்கடலை – 1/2 கப்,
கடலைப்பருப்பு – 1/4 கப்,
கறிவேப்பிலை – 2 கொத்து,
எண்ணெய் - 1 ஸ்பூன்
பூண்டு பல் – 5,
உப்பு – சுவைக்கு

செய்முறை

அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும வரமிளகாய் போட்டு வறுத்த பின்னர் வேர்க்கடலை, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

வேர்க்கடலையும் கடலைப்பருப்பும் பொன்னிறமாக வறுபடும் வரை இந்த பொருட்களை எல்லாம் கை விடாமல் வறுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இந்த பொருட்கள் அனைத்தும் வறுபட்ட உடன் அடுப்பை அணைத்து விடுங்கள்.

கடாயில் இருக்கும் பொருட்களை ஒரு தட்டில் கொட்டி நன்றாக ஆற வைத்துவிடுங்கள்.

அவை நன்றாக ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு அதோடு பூண்டு பல், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும்.அவ்வளவு தான். மணக்க மணக்க காரசாரமான வேர்கடலை பொடி தயார்.

 

Tags :

Share via