பிளஸ் 2 தேர்ச்சி பெற்றால் மத்திய அரசு வேலை; அமைச்சர் அறிவிப்பு!

by Editor / 12-05-2022 04:58:08am
பிளஸ் 2 தேர்ச்சி பெற்றால் மத்திய அரசு வேலை; அமைச்சர் அறிவிப்பு!

நிதி ஆயோக் நிகழ்ச்சியில் பேசிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா பேசியாவது: 

ஆளில்லா விமானங்களான டிரோன் துறையை 3 சக்கரங்களுக்கு நாங்கள் முன்னோக்கி கொண்டு செல்ல உள்ளோம்.

முதலில் இதற்கான கொள்கை வகுப்பது. இந்த கொள்கையை எவ்வளவு வேகமாக நாங்கள் அமல்படுத்த்ப் போகிறோம் என்பதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். 

தற்போதைய நிலையில், டிரோன்களை இயக்குவதற்கான டிரோன் பைலட் வேலைக்கு பிளஸ் 2 படித்திருந்தால் போதும். டிகிரி தேவையில்லை. அத்தகைய நபர்களுக்கு 3 மாதத்தில் பயிற்சி அளிக்க முடியும்.

பயிற்சி முடித்ததும், டிரோன் பைலட்டாக் வேலை சேர்பவர்களுக்கு மாதம் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும். எதிர்வரும் ஆண்டுகளில் நமக்கு ஒரு லட்சம் டிரோன் பைலட்கள் தேவைப்படுவார்கள். எனவே, இத்துறையில் அபரிமிதமான வாய்ப்புகள் வரப் போகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

 

Tags : Federal Government job if plus 2 passes; Minister announcement!

Share via