ஜி.எஸ்.டி மீது சட்டமியற்ற நாடாளுமன்றம் -சட்டமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது

by Writer / 20-05-2022 02:04:25am
ஜி.எஸ்.டி மீது சட்டமியற்ற  நாடாளுமன்றம் -சட்டமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது
ஜி.எஸ்.டி மீது  சட்டமியற்ற  நாடாளுமன்றம் -சட்டமன்றங்களுக்கு  அதிகாரம்  உள்ளது.இது  குறித்து  ஜி.எஸ்.டி .குழு தான் தகுதியான ஆலோசனைகளை  வழங்க வேண்டுமென்று  உச்ச நீதி மன்றம்  தெரிவித்துள்ளது .கப்பலில்இருந்து இறக்குமதி செய்யப்படும்  பொருள்களை  எடுத்து செல்வதற்கு  விதிக்கப்படும்  ஜி.எஸ்.டி வரி  விதிப்புகுறித்து  உச்சநீதி மன்றத்தில் இறக்குமதியாளர்களுக்கும்  மத்திய அரசுக்குமிடையே  வழக்கு நடந்து வருகிறது .இது தொடர்பாக ,குஜராத் நீதிமன்றம் வழங்கிய ஒருங்கிணைந்த  ஜி.எஸ்.டி அரசியலமைப்பு  முரணானது என்று வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மேல் முறையீடு  செய்த மனுவை  உச்ச நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது .ஜி.எஸ்.டி  குழு ஆலோசனைக்கு நாடாளுமன்றம்  நம்பிக்கை அளிக்கக்கும் என்று மத்திய  அரசுக்கும்  மோஹித் மினரல்ஸ் நிறுவனத்திற்குமான  வழக்கு   விசாரணையின் நீதிபதி போது டி.ஓய் சந்திரசூட்தலைமையிலான அமர்வு  இன்று தெரிவித்தது.ஜி.எஸ்.டி.குழு அரசியல் போட்டிகளுக்கு ஒரு பகுதியாக ,கூட்டாட்சி முறைக்கு எதிரானதாக இருப்பதைஅறிந்த நீதிபதி சந்திரசூட் ஜி.எஸ்.டி தொடர்பாக சட்டமியற்ற மாநில,மத்தியஅரசுகளுக்கு ஒரே நிலையானஅதிகாரம் இருப்பதாகவும் ஜி.எஸ்டி குழு இணக்கமான  முறையில் செயல்படக்கூடிய நிலையை அடையவேண்டும் என்று தெரிவித்தார். அரசியல்  அமப்பு  246 A, 279A  விதி  மத்திய  ,மாநில அரசு  ஒருங்கிணையாமல்  செயல்பட முடியாது  என்பதை ச்சுட்டிக்காட்டினார்.
 

Tags :

Share via