வெங்காய பூண்டு சட்னி

by Staff / 21-05-2022 05:21:14pm
வெங்காய பூண்டு சட்னி

தேவையான பொருட்கள் :

சின்ன வெங்காயம் - 1 கப்பு

 பூண்டு - 2 முழுவதும்
தக்காளி - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 சின்ன கொத்து

செய்முறை :

வெங்காயம், பூண்டு, தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை பச்சைவாசனை போகும்வரை நன்கு வதக்கவும்.

இவை வதங்கியதும் சிறிதுநேரம் ஆறவைத்து மிக்ஸியில் போட்டு அதனுடன் உப்பு மற்றும் மிளகாய்தூள் சேர்த்து அரைத்து வைக்கவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்து வைத்த சட்னியில் போட்டு கலந்து பரிமாறவும்.  இப்போது சுவையான வெங்காய பூண்டு சட்னி தயார்.

 

Tags :

Share via