மே 27 முதல் மதுரை-தேனி இடையே தினசரி சிறப்பு ரயில் சேவை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

by Editor / 23-05-2022 07:06:15pm
 மே 27 முதல் மதுரை-தேனி இடையே தினசரி சிறப்பு ரயில் சேவை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

மதுரை - தேனி ரயில் நிலையங்கள் இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய அகல ரயில் பாதை மே 26 அன்று பாரத பிரதமர் அவர்களால் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக மாலை 06.30 மணிக்குதுவக்கப்பட உள்ளது. அதே தினம் புதிய ரயில் சேவையும் துவக்கப்பட உள்ளது. பின்பு மே 27 முதல் இந்த பிரிவில் வழக்கமான ரயில் சேவை துவங்க உள்ளது.

அதன்படி மதுரை - தேனி முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயில் (06701) மதுரையிலிருந்து காலை 08.30 மணிக்கு புறப்பட்டு காலை 09.35 மணிக்கு தேனி சென்று சேரும்.  மறு மார்க்கத்தில் தேனி - மதுரை  முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயில் (06702) தேனியில் இருந்து மாலை 06.15 மணிக்கு புறப்பட்டு இரவு 07.35 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த ரயில்கள் வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 10 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள்,  இரண்டு இரண்டாம் வகுப்பு பொது மற்றும் சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி இணைக்கப்படும்.

 

Tags : The Prime Minister will launch a special daily train service between Madurai and Theni from May 27.

Share via