ரஷ்யாவுடன் போருக்கு மத்தியில் கார்கிவ் நகரில் அதிபர் ஜெலன்ஸ்கி ஆய்வு

by Staff / 30-05-2022 11:38:51am
ரஷ்யாவுடன் போருக்கு மத்தியில் கார்கிவ் நகரில் அதிபர் ஜெலன்ஸ்கி ஆய்வு

ரஷ்யாவுடனான போருக்கு மத்தியில் முதல் முறையாக தலைநகரைகிவ்  விட்டு வெளியேறி கார்கிவ்விற்கு அதிபர் ஜெலன்ஸ்கி சென்றார். ரஷ்யப் படைகளின் தாக்குதலில் சேதமடைந்த கட்டடங்கள் உருக்குலைந்து கிடக்கும் வாகனங்களை ஜெலன்ஸ்கி பார்வையிட்டார் சிதிலமடைந்து காணப்படும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்களில் மறு சீரமைக்கும் பணிகள் துவக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணத்தின் இடையே ராணுவ வீரர்களுக்கு விருது மற்றும் பரிசுகளை வழங்கி வீடியோவை அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ளது .போரில் வடகிழக்கு நகரங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டுவதாக அப்பகுதி பாதுகாப்பு தலைவரை பணிநீக்கம் செய்து ஜெலன்ஸ்கி உத்தரவிட்டதாக அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via