கஞ்சா வியாபாரிகளுக்கு வசமாக செக் வைத்த போலீஸ்.. 813 வங்கிக் கணக்குகள் முடக்கம்

by Editor / 30-05-2022 09:29:00pm
கஞ்சா வியாபாரிகளுக்கு வசமாக செக் வைத்த போலீஸ்.. 813 வங்கிக் கணக்குகள் முடக்கம்

மதுரை: கஞ்சா வியாபாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க 494 வழக்குகளில் தொடர்புடைய நபர்களின் 813 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.சட்டம், ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும் பகுதிகளில், போலீசார் அமைதியை உண்டாக்கும் பணிகளிலும ஈடுபட்டு வருகின்றனர். பழிக்குப்பழியாக கொலைகள் நடக்கும் பகுதியில், சம்பந்தப்பட்ட இரு தரப்பையும் அழைத்துப் பேசி, மேலும் சம்பவங்கள் தொடராத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் சிறைக்கு செல்வது, வெளியே வந்து மீண்டும் கஞ்சா விற்பனை செய்வது என அது ஒரு குடிசை தொழிலாகவே நடந்து வருகிறது. எனவே கஞ்சா கடத்தல், விற்பனையை கட்டுப்படுத்த காவல்துறை புதிய வழிமுறையை கையில் எடுத்துள்ளது.

கஞ்சா வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவது மட்டுமின்றி, அவர்களின் வங்கிக் கணக்கு மற்றும் சொத்துக்களை முடக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தென் மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக மதுரை, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 494 வழக்குகளில் தொடர்புடைய நபர்களின் 813 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த 90 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இதில் அதிகபட்சமாக மதுரையில் 114 வழக்குகளில் 191 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் 76 கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 119 வங்கி கணக்குகளும், திண்டுக்கல் மாவட்டத்தில் 114 வழக்குகளில் தொடர்புடைய 191 வங்கி கணக்குகளும்முடக்கம் செய்யப்பட்டுள்ளன.

 

Tags : Police check for convenience of cannabis dealers .. 813 bank accounts frozen

Share via