அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரம் பள்ளி பட்டமளிப்பு விழாவில் துப்பாக்கி சூடு

by Staff / 01-06-2022 01:42:09pm
அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரம் பள்ளி பட்டமளிப்பு விழாவில் துப்பாக்கி சூடு

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் திடீரென நுழைந்த மர்ம நபர் சுற்றியிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். நீயு ஆர்லியன்ஸ் நகரில் நடைபெற்ற மோரிஸ் உயர்நிலைப்பள்ளி பட்டமளிப்பு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் சேவியர் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள பட்டமளிப்பு மையத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் வயதான பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். 

 

Tags :

Share via