இலங்கையில் மீண்டும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் அதிகாரிகள் எச்சரிக்கை

by Staff / 07-06-2022 02:23:08pm
இலங்கையில் மீண்டும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும்  அதிகாரிகள் எச்சரிக்கை

இந்திய கடன் உதவி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் முடிவடையும் தருவாயில் உள்ளதால் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொருளாதார நெருக்கடி நிலவும் இலங்கைக்கு கப்பல் மூலம் ஏப்ரல் முதல் இந்தியாவில் இருந்து எரிபொருள் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவின் எரிபொருள் நிரப்ப கடைசி கப்பல் வரும் 16ஆம் தேதி இலங்கை சென்றடைய உள்ளது. இந்த சூழலில் இலங்கையில் டாலர் கையிருப்பு பற்றாக்குறை நிலவுவதால் மீண்டும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்நாட்டு எரிபொருள் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo