பற்றி எரிந்த விக்ரம் திரை பதறி ஓடிய ரசிகர்கள்

by Staff / 08-06-2022 12:01:08pm
பற்றி எரிந்த விக்ரம் திரை பதறி ஓடிய ரசிகர்கள்

 புதுச்சேரியில் நடிகர் கமலஹாசனின் விக்ரம் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டரில் திரையில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் படம் பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு திரையை விட்டு  வெளியேறினர். புதுச்சேரி அருகே காட்டுப்பகுதியில் உள்ள ஜெயா திரையரங்கில் நடிகர் கமலஹாசன் நடித்த விக்ரம் படம் திரையிடப்பட்டுள்ளது .இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு காட்சி ஓடிக் கொண்டிருக்கும் போது திரையின் ஒரு பக்கத்தில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது இதனால் தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு தியேட்டரை விட்டு வேகமாக வெளியேறினான். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முற்றிலும் எரிந்து சாம்பலானது முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via