17 மாவட்டங்களுக்கு கனமழை வானிலை ஆய்வு மையம் கணிப்பு

by Staff / 15-06-2022 03:09:03pm
17 மாவட்டங்களுக்கு கனமழை  வானிலை ஆய்வு மையம் கணிப்பு

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி,  திண்டுக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல் மாவட்டங்கள், 

கரூர், திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நாளை முதல் 18ஆம் தேதி வரை  நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி,  திண்டுக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல் மாவட்டங்கள்,கரூர், திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில்  மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.
 
இலட்சத்தீவு பகுதி, கேரளா மற்றும்  அதனை ஒட்டிய  தென் கிழக்கு அரபிக்கடல், இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல்  பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்  வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 

 

Tags :

Share via