போதைப் பொருட்கள் விற்பனை கடைகளில் போலீசார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு

by Editor / 16-06-2022 05:00:00pm
போதைப் பொருட்கள் விற்பனை கடைகளில் போலீசார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு

தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.அதன் பேரில், போடி நகர் காவல்நிலைய, ஆய்வாளர் பிரேம் ஆனந்த் மற்றும் வட்டார உணவு பாதுகப்பு அதிகாரி சரண்யா மற்றும் போலீசார் போடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளில், ஆய்வு மேற்கொண்டனர்.இதில் அப்பகுதியில் உள்ள நான்கு கடைகளில், 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, 15 கிலோ குட்கா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அத்துடன், 4 கடைகளுக்கும், தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
அத்துடன், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் கப்புகள் கைப்பற்றப்பட்டு, அக்கடைக்கு  2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர். 

 

Tags :

Share via