திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பு.

by Editor / 05-08-2023 10:00:13am
 திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பு.

மழை பற்றாக்குறை காரணமாகவும் தாமிரபரணி குடிநீரையே நம்பி உள்ள மூன்று மாவட்ட மக்களின் நலன் காக்கும் விதமாகவும் பாபநாசம் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு நீர்வரத்தைப் பொறுத்து மட்டும் திறந்து விடுவது என இன்று (4.8.2023) முதல் அமல்படுத்தப்படுகிறது. 

மணிமுத்தாறு அணையிலும் போதிய நீர் இல்லாத நிலையில் தற்போது உள்ள நீர் குடிநீர் தேவைக்கு மட்டும் (300-350 cusecs per day) பயன்படுத்தினால் 40 முதல் 45 நாட்கள் வரை பயன்படுத்தலாம். வேளாண் மற்றும் குடிநீர் தேவை இரண்டுக்கும் (min 750 cusecs per day) பயன்படுத்தினால் 10-15 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த இயலும்

இது தொடர்பாக நீர்வளத் துறையால் விவசாய பெருமக்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களின் ஒத்துழைப்பும் கோரப்பட்டுள்ளது

இந்நிலையில், ஒரு சில இடங்களில் விஷமிகள் தவறான நோக்கத்துடன் தேவையற்ற வதந்திகளை பரப்பிவருவதாக தெரிகிறது. அதுபோன்ற அவதூறான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது

குடிநீர் தேவைக்காக மக்கள் நலன் கருதி எடுக்கப்படும் இந்த நடவடிக்கைகளின் அவசியத்தை அனைவரும் உணர்ந்து  ஒத்துழைப்பு நல்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.என திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via