சுதந்திர போராட்ட வீரர் வீரவாஞ்சிநாதன் நினைவு தினத்தை ஒட்டி மரியாதை செலுத்தப்பட்டது.

by Editor / 17-06-2022 03:48:08pm
சுதந்திர போராட்ட வீரர் வீரவாஞ்சிநாதன் நினைவு தினத்தை ஒட்டி மரியாதை செலுத்தப்பட்டது.

சுதந்திர போராட்ட வீரர் வீரவாஞ்சிநாதனின் 111- வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை பூங்கா வளாகத்தின் பகுதியில் உள்ள வீர வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் உள்ள வீர வாஞ்சிநாதன் சிலைக்கு தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் செங்கோட்டை வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு துறை உயரதிகாரிகள் உடனிருந்தனர். அதனைத் தொடர்ந்து கொல்லம் ரோட்டிலுள்ள அவரதுசிலைக்கு  வீரவாஞ்சிநாதனின் பேரன் வாஞ்சிகோபாலகிருஷ்ணன்,வாஞ்சி இயக்கத்தலைவர்  ராமநாதன்,சட்டமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ண முரளி, பழனி நாடார்,பாஜக, இந்து அமைப்புக்கள், பிராமண சங்கம்,திமுக,அதிமுக,இந்திய மாணவர் பேரவை,அமமுக,கம்யூ,உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும் வாஞ்சிநாதன் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அதே சமயம் வரலாற்று பிழையாக வாஞ்சியின் சிலை அவரது நினைவு நாளான இன்று கழுவிகூட சுத்தம் செய்யப்படாமல் இருந்ததும் அதனைக்கூட அரசியல் கட்சியினர் கண்டுகொள்ளாமல் மாலை அணிவித்து சென்றதும் வேதனை அளிப்பதாகவே  இருந்தது.

சுதந்திர போராட்ட வீரர் வீரவாஞ்சிநாதன் நினைவு தினத்தை ஒட்டி மரியாதை செலுத்தப்பட்டது.
 

Tags : Freedom fighter Veera Vanchinathan was honored on the occasion.

Share via

More stories