பிள்ளைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாத மன உளைச்சலில் நகை மதிப்பீட்டாளர் தூக்கிட்டு தற்கொலை

by Editor / 19-06-2022 01:58:00pm
பிள்ளைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாத மன உளைச்சலில் நகை மதிப்பீட்டாளர் தூக்கிட்டு தற்கொலை

சேலம் அருகே மனைவியிடம் பணம் நகைகளை வாங்கிக் கொண்டு சிலர் ஏமாற்றியதால் பிள்ளைகளுக்கு கல்வி கடன் செலுத்த முடியாத மன உளைச்சலில் நகை மதிப்பீட்டாளர் ஒருவர் வீடியோ வெளியிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டர். மோகன்தாஸ் என்ற அந்த நபர் வங்கியில் நகை மதிப்பீட்டாளர் ஆக பணிபுரிந்து வந்தார் இவரது மனைவி மேரி அதே பகுதியை சேர்ந்த சாந்தி சுபா ஆகியோருக்கு ஆதாரம் ஏதுமின்றி பணம் நகைகளை கொடுத்ததாக கூறப்படுகிறது. மோகன்தாஸ் பணத்தை திருப்பி கேட்ட போது அவர்கள் தர மறுப்பதாகவும் போலீசில் புகார் அளித்தபோது  சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி நபர் சாந்தி சுபாவுக்கு சாதகமாக செயல்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அவர்கள் பணத்தை ஏமாற்றியதால் தனது மகள் மகனுக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியவில்லை என்று கூறி மோகன்தாஸ் வீடியோ வெளியிட்ட தற்கொலை செய்து கொண்டார்.

 

Tags :

Share via

More stories

Logo