விஜயகாந்திற்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாததன் காரணமாக அறுவை சிகிச்சை

by Editor / 21-06-2022 10:34:45am
விஜயகாந்திற்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாததன் காரணமாக அறுவை சிகிச்சை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில ஆண்டுகாலமாக  உடல்நலம் பாதிக்கப்பட்டுசிகிச்சை பெற்றுவருவதால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை கடந்த சில ஆண்டுகளாகத் தவிர்த்து வருகிறார்.  தனது குடும்பத்தினருடன் விஜயகாந்த் இருக்கும் புகைப்படங்கள் மட்டுமே சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டு வருகின்றன.

ஜூன் 14-ம் தேதி தேமுதிக தலைவரும் பிரபல நடிகருமான விஜயகாந்த் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாததன் காரணமாக அறுவை சிகிச்சை மூலம் காலில் உள்ள 3 விரல்களை அகற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், சிகிச்சைக்குப் பின் நலமுடன் இருப்பதாகவும் விரைவில் அவர் வீடு திரும்புவார் என  தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags : Vijaykanth underwent surgery due to irregular blood flow

Share via