அரசு பேருந்து ஓட்டுநர்கள் தாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் 4-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம்

by Editor / 26-06-2022 05:11:09pm
அரசு பேருந்து ஓட்டுநர்கள் தாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் 4-வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம்

புதுச்சேரியில் அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த வலியுறுத்தியும் பேருந்துகளை இயக்காமல் ஊழியர்கள் நான்காவது நாளாக இன்றும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக டைமிங் பிரச்சினை காரணமாக அரசின் சாலை போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், தனியார் பேருந்து ஊழியர்களால் தாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் தாக்கப்படும் சம்பவத்தை கண்டித்தும், பணி பாதுகாப்பு கோரியும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.போராட்டத்தில் ஈடுபட்டதால் பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் பேருந்துகளை இயக்காமல் இன்று நான்காவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
முன்னதாக, போக்குவரத்து கழக தொழிலாளர்களுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் 12 பேர் இதுவரை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

Tags :

Share via