மெட்ரோ ரயிலில் திடீர் ஆய்வு மேற்கொண்ட தலைமைசெயலாளர் இறையன்பு

by Editor / 26-06-2022 01:54:12pm
மெட்ரோ ரயிலில் திடீர் ஆய்வு மேற்கொண்ட தலைமைசெயலாளர் இறையன்பு

 சென்னை மெட்ரோ ரயிலில் ஒரு வாரத்திற்குள்ளாக 3 முறை தொழில்நுட்பக் கோளாறுகள்ஏற்பட்டுபயணிகள் பாதிக்கப்பட்டதாக ஏற்பட்ட குற்றச்சாட்டுக்கள் காரணமாக  ரயில் இயக்கத்தினை ஆய்வு செய்ய சென்னை மெட்ரோ இரயிலில் பயணித்து பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்து, செயல்பாடு குறித்து தலைமைச்செயலாளர் இறையன்பு திடீர் ஆய்வு செய்தார்.பின்னர் பயணிகளின் கோரிக்கைகளை அவர் கேட்டு குறிப்பெடுத்துக்கொண்டார்.மேலும் மக்களின் குறைகள் உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை எடுக்கப் படுமென பயணிகளிடம் தெரிவித்ததாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.தலைமைச்செயலாளர் இறையன்பு  மெட்ரோ ரயிலில் திடீர் ஆய்வு பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

 

Tags : Secretary-General conducts surprise inspection of Metro train

Share via

More stories