கோவிட் மருத்துகளுக்கு 0% வரியை நிர்ணயிக்க வேண்டும்  நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 

by Editor / 29-05-2021 05:11:04pm
 கோவிட் மருத்துகளுக்கு 0% வரியை நிர்ணயிக்க வேண்டும்  நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 


 

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 43-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகம் சார்பில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கு பெற்றார்.
கூட்டத்தில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது,
'கொரோனா தொற்று இந்தியாவில் அதி தீவிரமடைந்துள்ள சமயத்தில் மத்திய, மாநில அரசுகளின் முன்னுரிமை பணியாக கொரோனா தடுப்பு பணிகளே இருந்து வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில், மாநில அரசுகள் கோவிட் தடுப்பூசிகள் மற்றும் ரெம்டெசிவிர், டோசிலிசுமாப் உள்ளிட்ட மருந்துகளை கொள்முதல் செய்வதை முதன்மை பணியாக செய்து வருகிறது. இந்த சூழலில், இவற்றை கொள்முதல் செய்யும் போது, இவற்றுக்கான ஜி.எஸ்.டி வரியை பூஜ்ஜியமாக மத்திய அரசு நிர்ணயித்தால் மாநில அரசுகளுக்கு பேருதவியாக இருக்கும்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதற்கு முன்பாக பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். இதுபோன்ற பூஜ்ஜிய ஜி.எஸ்.டி மதிப்பீட்டை செயல்படுத்துவதில் சில சட்ட சிக்கல்கள் உள்ளன. ஆனால், இந்த சட்ட சிக்கல்களை தேவையான சட்டங்கள் மூலமாகவோ அல்லது ஒருமித்த கருத்தை எட்டியவுடன் அதிகாரப்புர்வ அறிவிப்புகள் மூலமாகவோ சமாளிக்க முடியும்.
மாநிலங்களுக்கான பாதுகாக்கப்பட்ட வருவாய்க்கும், உண்மையான எதிர்பார்க்கப்படும் வருவாய்க்கும் இடையில் 2021-22 ஆம் ஆண்டில் எழும் இடைவெளியை மாநிலங்களுக்கு முழுமையாக ஈடுசெய்வதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்ய வேண்டும். தொற்றுநோயின் நீண்ட கால விளைவுகளை கருத்தில் கொண்டு, 2022 ஜூலை 1 க்கு அப்பால் இழப்பீட்டு ஏற்பாட்டை நீட்டிப்பதும் பொருத்தமானதாக இருக்கும் என /தெரிவித்தார்.

 

Tags :

Share via