மர்மக் கொலை வழக்கில் சிக்கிய உதவி ஆய்வாளர் மகன்

by Editor / 30-06-2022 11:31:37am
மர்மக் கொலை வழக்கில் சிக்கிய உதவி ஆய்வாளர் மகன்

புதுச்சேரி புறநகர பகுதியான சேதராப்பட்டில் கணவரை இழந்த நிலையில், வீட்டு வாடகை விடுவது மற்றும் பால் வியாபாரம் செய்து வந்தவர் மூதாட்டி உண்ணாமலை (வயது 75). இவருக்கு 3 மகள்கள், 2 மகன்கள்.  அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி இரவு உண்ணமாலை தனது வீட்டில் மர்மான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேதராபட்டு போலிசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்திருந்தனர்.இதற்கிடையே மூதாட்டியின் நகைகள் காணாமல் போய் உள்ளதாக அவரது உறவினர்கள் கூறிய நிலையிலும், பிரேத பரிசோதனை அறிக்கையில் யாரோ அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக தெரியவந்ததை அடுத்து இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலிசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.அதில் அந்த மூதாட்டி வசித்து வந்த வீதியில் இருந்து வரும் இரண்டு நபர்கள் மீது சந்தேகம் அடைந்த போலிசார் செல்போஃன் டவர் மூலம் அவர்களின் நடமாட்டங்களை நோட்டமிட்டு வந்தனர், கடந்த 5 நாட்களாக கண்காணித்த போலிசார் நேற்று மாலை அவர்கள் இருவரை கைது செய்து விசாரணை செய்ததில், அதில் ஒருவர் கூட்ரோடு பகுதியை சேர்ந்த  ஸ்டிப்பன் (39) என்பதும் இவர் சோதரப்பட்டு பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் தொழில் செய்து வருவதும், மற்றொருவர் லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த சிக்மா பிரிவில் பணி புரியும் உதவி ஆய்வாளர் பாலாவின் மகன் பாலா பவித்ரன் (26) என்பதும் தெரியவந்தது.கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் வடக்கு பிரிவு தனிபடை போலிசார் ரகசிய இடத்தில் வைத்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், முழு விசாரணை முடிந்த பிறகே அவர்கள் எதற்காக கொலை செய்தார்கள் என்பது குறித்து தெரியவரும் என போலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via