பிரபல ஜவுளி நிறுவனத்தின் சில்லறை விற்பனையை தடுத்து நிறுத்திய சில்லறை வியாபாரிகள்

by Editor / 05-07-2022 05:22:04pm
பிரபல ஜவுளி நிறுவனத்தின் சில்லறை விற்பனையை தடுத்து நிறுத்திய சில்லறை வியாபாரிகள்

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை வரும் 10ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.இதனைத்தொடர்ந்து மக்கள் கூடுமிடங்களில் வியாபாரம் செய்ய பெரிய நிறுவனங்கள் களமிறங்கத்தொடங்கியுள்ளன.இதன் தொடர்ச்சியாக கடையநல்லூர்  காயிதே மில்லத் திடலில் தமிழகத்தின் பிரபலமான தி சென்னை சில்க் ஜவுளி நிறுவனத்தின் சார்பில் நடமாடும் வாகனம் மூலம் ஜவுளி சில்லறை வியாபாரத்தை நடத்த திட்டமிட்டு அதற்கான ஆயத்த பணிகளையும் வியாபாரம் செய்ய திட்டமிட்டு இருந்தது இதனை அறிந்த  கடையநல்லூர் வர்த்தக சங்க வியாபாரிகள் இதனை  தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்த ஏற்பாடு செய்ய உள்ளதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலைத்தொடர்ந்து  விரைந்து வந்த கடையநல்லூர் காவல்துறை மொபைல் வேன் வியாபாரத்தை நிறுத்தியது.

 

Tags : Retailers who stopped the retail sale of a famous textile company

Share via