தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன - அமைச்சர் செந்தில்பாலாஜி

by Editor / 18-07-2022 08:20:52pm
தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன - அமைச்சர் செந்தில்பாலாஜி

தமிழகத்தில்  மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டுமென மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இல்லையென்றால் தமிழகத்திற்கு ஒன்றிய அரசின் மானியம் தரமாட்டோம். ஒன்றிய அரசின் மின் திட்டங்கள் செயல்படுத்த மாட்டோம் என மத்திய எரிசக்தி துறை தொடர்ந்து 28 முறை கடிதம் எழுதியுள்ளது.

அதன்படி மாதம் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50, 301 - 400 வரை பயன்படுத்துவோருக்குரூ.147.50, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவர்களுக்கு ரூ.298.50 கூடுதலாக கட்டும் வகையில் மின் கட்டணம் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் 12,646 கோடியாக கடன் தொகை  உயர்ந்துள்ளது என்றும் .வீட்டு மின் இணைப்புக்கு  100 யூனிட் இலவம் வழங்குவதில் எந்த மாற்றமும் இல்லை. கேஸ் இணைப்புமானியத்தை வேண்டாமென எழுதிக்கொடுத்தது போல 100 யூனிட் இலவச மின்சாரத்தை வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் திட்டம் அறிமுகமாகிறது. 42% வீடுகளுக்கான மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

 

Tags : Changes in electricity tariff are being brought in Tamil Nadu - Minister Senthilbalaji

Share via