நாற்பத்தி நான்காவது செஸ் ஒலிம்பியாட் குதிரை வடிவ உருவ பொம்மைகளை தயாரிக்கும் பணி தீவிரம்

by Editor / 22-07-2022 05:09:52pm
நாற்பத்தி நான்காவது செஸ் ஒலிம்பியாட் குதிரை வடிவ உருவ பொம்மைகளை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள நாற்பத்தி நான்காவது செஸ் ஒலிம்பியாட் தொடரின் சின்னமான குதிரை வடிவ உருவ பொம்மைகளை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தம்பி என்ற வேட்டி சட்டை அணிந்த குதிரை உருவத்தை தயாரிக்கும் பணி சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்று வருகிறது. அதேபோல் நகரின் முக்கிய இடங்களிலும் நிறுவ சதுரங்க விளையாட்டில் பயன்படுத்தப்படும் ராஜா ராணி வடிவங்களையும் 15 அடி உருவாக்கி வருவதாக அதனை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via