உங்கள் கணக்கில் வேறு ஒருவர் பணம்  எடுக்க எஸ்.பி.ஐ வங்கி புதிய அறிவிப்பு

by Editor / 24-07-2021 08:49:21pm
உங்கள் கணக்கில் வேறு ஒருவர் பணம்  எடுக்க எஸ்.பி.ஐ வங்கி புதிய அறிவிப்பு

 

வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாய் எஸ்.பி.ஐ வங்கி புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளது. அதன்படி காசோலை மற்றும் திரும்பப் பெறும் படிவத்தின் மூலம் non - home cash திரும்பப்பெறும் வரம்புகளை அதிகரித்துள்ளது. அதன்படி, உங்கள் சொந்த கணக்கில் பணம் எடுக்கிறீர்கள்? என்றால் பாஸ்புக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் 25 ஆயிரம் வரை பணத்தினை எடுத்துக்கொள்வதற்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

இதோடு நீங்கள் உங்கள் பணத்தினை உங்களது கிளை இல்லாமல் வேறொரு கிளையில் பணம் எடுக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக பாஸ்புக் உடன் எடுத்துச்செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 வது நபர் withdrawal form மூலம் பணம் அனுப்ப முடியாது என எஸ்.பி.ஐ வங்கி அறிவித்துள்ளது.


இதோடு, காசோலையினை பயன்படுத்தி ரூ.1 லட்சம் வரை பணம் எடுத்துக்கொள்ளலாம் எனவும், மூன்றாம் தரப்பினர் காசோலையினைப் பயன்படுத்தி பணம் எடுக்கிறார் என்றால் பணத்தின் மதிப்பு ரூ. 50 ஆயிரம் மட்டுமே இருக்க வேண்டும் எனவும் எஸ்.பி.ஐ வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் பணம் எடுப்பவர்களுக்கு KYC கட்டாயம் என அறிவித்துள்ளது. மேலும் உங்கள் காசோலையினைக்கொடுத்து நீங்கள் உங்கள் கணக்கில் பணம் எடுப்பதற்கு ஒருவரை அனுப்பினால், உரிய பணத்தினை ஒப்படைப்பதற்கு முன்னதாக கே.ஓய்.சி கேட்கப்படும் எனவும் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாக தங்களுடைய பணத்தினை எடுக்க முடியும் என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தற்போது எஸ்.பி.ஐ வங்கியில் மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த வரம்புகள் வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி வரை மட்டுமே மக்களின் வசதிக்காக நடைமுறையில் இருக்கும் எனவும் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via