இன்றே கடைசி நாள் பொறியியல், கலை அறிவியல் கல்லூரியில் சேர ....

by Editor / 27-07-2022 09:30:24am
இன்றே கடைசி நாள் பொறியியல், கலை அறிவியல் கல்லூரியில் சேர ....

தமிழகத்தில் மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்த பிளஸ்-2 மாணவர்கள் உயர் கல்வியில் சேர கடந்த மாதம் முதல் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் சி.பி.எஸ்.இ., பிளஸ்-2 தேர்வு முடிவு தாமதம் ஆனதால் அம்மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன்படி இன்று (27-ந் தேதி) வரை கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர 2 லட்சத்து 5 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதே போல 163 கலை அறிவியல் கல்லூரிகளில் 4 லட்சத்து 1494 பேர் நேற்று வரை விண்ணப்பித்து உள்ளனர்.

 

Tags : Today is the last day to enroll in College of Engineering, Arts and Sciences..

Share via