அண்ணா பல்கலையில் விரைவில் பாரம்பரிய சித்தா, ஆயுர்வேத மருத்துவ கல்வி

by Editor / 01-08-2022 10:17:12am
அண்ணா பல்கலையில் விரைவில் பாரம்பரிய சித்தா, ஆயுர்வேத மருத்துவ கல்வி

இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேத படிப்புகளை மேலும் பிரபலப்படுத்தும் வகையில் புதிய திட்டமாக அண்ணா பல்கலைகழகத்தில் சித்தா, ஆயுர்வேத படிப்புகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 
கொரோனா காலகட்டத்தில் மருந்து கண்டுபிடிக்காமல் மக்கள் துன்பப்பட்ட நேரத்தில் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி மருந்தாக பயன்பட்டது நமது பாரம்பரிய மருத்துவ முறைதான். கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வேம்பு, இஞ்சி, மஞ்சள், போன்ற பொருட்களை வென்னீரில் போட்டு ஆவி பிடித்தல் போன்ற மிக எளிமையான முறைகள் மக்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது.

அதேபோல் நிலவேம்பு கசாயம், கபசுர குடிநீர், கீழாநெல்லி கசாயம் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியதாக இருந்தது. இதையடுத்து கொரோனா காலகட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு கசாயம் மக்களுக்கு கொடுக்கப்பட்டது. இதனால் மக்கள் மறுபடியும் நமது பாரம்பரிய மருத்தவமுறையான ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவ முறைகளை தற்போது பின்பற்ற தொடங்கியுள்ளனர்.

இதையடுத்து அண்ணா பல்கலைகழகம் இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேத படிப்புகளை மேலும் பிரபலப்படுத்தும் வகையில் சித்தா, ஆயுர்வேத படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்காக தேசிய சித்த மருத்துவ நிறுவனத்துடன், அண்ணா பல்கலைக்கழகம் ஓரிரு நாட்களில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் உள்ள மாணவர்களிடம் சித்தா, ஆயுர்வேத மருத்துவத்தை கொண்டு செல்லும் வகையில் ஆன்லைன் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

 

Tags :

Share via