சிலிண்டர் விலை குறைப்பு

by Editor / 01-08-2022 10:08:38am
சிலிண்டர் விலை குறைப்பு

வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2 ஆயிரத்து 177 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் சற்று குறைத்துள்ளன. அதன்படி 19 கிலோ எடைகொண்ட சிலிண்டருக்கு ரூ.36.50 குறைக்கப்பட்டுள்ளது. இதனால் 19 கிலோ எடை கொண்ட வணிகபயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 2,141 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுகிறது. ஆனால், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் சிலிண்டர் ஒன்று ரூ.1068.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

Tags :

Share via