வேளாங்கண்ணி திருவிழா-குளிக்க தடை- மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

by Editor / 01-08-2022 09:49:11pm
வேளாங்கண்ணி திருவிழா-குளிக்க தடை- மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா ஆகஸ்ட்  29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், திருவிழா முன்னேற்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜவகர், மாவட்ட வருவாய் அலுவலர் சகிலா, மற்றும் வருவாய்த்துறை, தீயணைப்பு துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் நிறைவு பெற்றபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், உலகப் புகழ்பெற்ற நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழா இம்மாதம் 29 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் அங்கு முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்றார்.

திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் வசதி, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளை விரிவாக செய்திட வேண்டும் என அனைத்து துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட பட்டுள்ளதாகவும்,என கூறினார். 

வேளாங்கண்ணி திருவிழாவிற்கு வரும் பக்தர்களிடம் தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்றும் அவ்வாறு கூடுதல் கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். மேலும் திருவிழா நாட்களில் வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்கள் கடலில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் உயிரிழப்புகள் ஏற்படுவதை தவிர்த்திடும் பொருட்டு கடலில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் அருண் தம்புராஜ் விளக்கமளித்தார்.

 

 

Tags : வேளாங்கண்ணி திருவிழா-குளிக்க தடை- மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

Share via