தியாகராஜ பாகவதர் பேரனுக்கு  ரூ.5 லட்சம், வீடு அளிக்க  முதல்வர் உத்தரவு 

by Editor / 30-06-2021 07:10:56pm
தியாகராஜ பாகவதர் பேரனுக்கு  ரூ.5 லட்சம், வீடு அளிக்க  முதல்வர் உத்தரவு 

 

அரசு தங்களுக்கு வீடு வழங்கி உதவ வேண்டும்' என, தியாகராஜ பாகவதர் பேரனான சாய்ராம் முதல்வருக்கு கோரிக்கை விடுத்தார். இது குறித்து நேற்று அவர் கூறும்போது,தியாகராஜ பாகவதருக்கு இரண்டு மனைவியர். 2வது மனைவி ராஜம்மாளின் மகள் அமிர்தலட்சுமி. அவருக்கு நான் உட்பட மூன்று மகன்கள்; ஒரு மகள். சிறுவயதிலேயே அப்பா இறந்து விட்டார்; அம்மாவும் இல்லை.எங்களுக்கு பாட்டி தான் எல்லாமுமாக இருந்தார்.
நாங்கள் பெண் பிள்ளைகளை வைத்துக் கொண்டு, கொரோனா காலத்தைசமாளிக்க முடியாமல் தவிக்கிறோம். வாடகை வீட்டில் வசிக்கும் நாங்கள், வாடகை கொடுக்கக்கூட பணமின்றி கஷ்டப்படுகிறோம்.
ஊரடங்கால் வேலைவாய்ப்பும் சரியாகஅமையவில்லை. பிள்ளைகளின் படிப்பு செலவுக்கு நடிகர்கள் பார்த்திபன்,சிவகுமார் குடும்பத்தினர் உதவுகின்றனர்.இந்த காலத்தில், வீட்டு வாடகை பெரிய சுமையாக உள்ளது. தற்போதைக்கு அரசு தரப்பில் வீடு ஒதுக்கி கொடுத்தால்,நாங்கள் அனைவருமே தங்கி கொள்வோம்.
இதற்கு முன், 2008ல், எங்கள் பாட்டிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது, அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் முறையிட்டோம். அவர் 1 லட்சம் ரூபாய் கொடுத்து உதவினார்.போட்டோகிராபரான எனக்கு சொந்தமாக கேமரா இல்லை. இதனால், வேலை வாய்ப்பு கேள்விக் குறியாகிவிட்டது.சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த எந்திரன் படத்தில், இரண்டு நாட்கள் பணியாற்றினேன். ஒரு நாளுக்கு, 1,000 ரூபாய் கொடுத்தனர்.அதன் பின் பெரிய வாய்ப்பு வரவில்லை.என்று  அவர்கூறினார்.
இந்த நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்  ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில்  தியாகராஜ பாகவதர் பேரனுக்கு ரூ.5 லட்சம்  உதவி, வீடு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 

 

Tags :

Share via