இன்று முதல் மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கம்

by Editor / 17-03-2022 08:13:09am
இன்று முதல்  மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கம்

சென்னை மெட்ரோ ரயில்கள் இன்று முதல் அனைத்து நாட்களிலும் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கம் இதுவரையில் 5:30 முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் பயணிகளின் நலன் கருதி இன்று முதல் அரைமணி நேரம் முன்னதாகவே இயக்கப்படும் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது வாரநாட்களில் நெரிசல் மிகுந்த நேரங்களில் 5 நிமிடம் இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் எனவும் வார இறுதி நாட்கள் மற்றும் அரசு பொதுவிடுமுறை களில் 10 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் அனைத்து நாட்களிலும் இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது

 

Tags : Metro trains will run from 5 am to 11 pm from today

Share via