ஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வு செப்.16-ல் தொடக்கம்

by Editor / 05-08-2022 09:32:25am
ஐஏஎஸ், ஐபிஎஸ் சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வு செப்.16-ல் தொடக்கம்

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட அரசு குடிமைப்பணிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என 3 கட்டங்களாக தேர்வுகள் நடைபெறுகிறது.

இந்நிலையில், இந்தாண்டு 861 காலிபணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பாணையை கடந்த பிப்ரவரி மாதம் யுபிஎஸ்சி வெளியிட்டது.

இதற்கான முதல்நிலைத் தேர்வு ஜூலை 4-ம் தேதி நாடு முழுவதும் 77 நகரங்களில் நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கான முடிவு இன்னும் வெளியாகாத சூழலில், அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வு குறித்த அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

அதன்படி, செப்டம்பர் 16, 17, 18 மற்றும் 24, 25-ம் தேதிகளில் முதன்மைத் தேர்வு நடைபெற உள்ளது. கூடுதல் விவரங்களை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

 

Tags : IAS, IPS Civil Service Main Exam to start on Sep 16

Share via